காலரா என்னும் நோய் விபிரியோ காலரே எனப்படும் பாக்டீரியாவால் தொற்றக்கூடிய குடல் அழற்சி நோய் ஆகும். இந்த பாக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன்மூலம் இந்நோய் மனிதருக்கு ஏற்படுகிறது.
குழந்தை நல மருத்துவரான கிரண் மார்ட்டின், டெல்லியில் குடிசைப் பகுதிகளில் வசித்துவரும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
டெல்லியில் 1988ஆம் ஆண்டு காலரா தொற்றுநோய் ஏற்பட்டது. இதனால் அதிகளவில் குடிசைப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்தச் சமயத்தில்தான் மருத்துவர் கிரண் மார்ட்டின் அந்தப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தார். இதைத் தொடர்ந்து, அவர் குடிசைப் பகுதியில் ஒரு மரத்தடிக்குக்கீழ் டேபிள் போட்டு காலரா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதை ஒரு திட்டமாகவே செய்து வந்தார். இப்போது, 2017ஆம் ஆண்டில் டெல்லியிலுள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளில் உள்ள சுமார் 5 லட்சம் மக்களுக்கு உதவி செய்துவருகிறார்.
இதுகுறித்து குழந்தை நல மருத்துவர் கிரண் மார்ட்டின் கூறுகையில், ‘முதன்முறையாக குடிசைப் பகுதிக்குள் நுழைந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே நுழைவதற்கு சரியான நுழைவுவாயில் இல்லை. எல்லா இடங்களிலும் குப்பைகள் குவியல் குவியலாக இருந்தன. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இப்படி சுகாதாரமில்லாமல் இருக்கும் பகுதிக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என நினைத்தேன். அதுதான், என்னை ஒரு மரத்தடிக்குக்கீழ் என் பணியை தொடங்கத் தூண்டியது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆஷா சொசைட்டி என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நிறுவிய மார்ட்டின், அதன்மூலம் குடிசைப் பகுதி மக்களுக்கு உதவி வருகிறார். அந்த சொசைட்டியால், அடிப்படை நோய்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும் என்பது குறித்து பெண்களுக்கு ஆறு மாதத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்குத் தேவையான உபகரணங்களும் அளிக்கப்பட்டன. அந்தப் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால், நான் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். பெண்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்தன்மையும், அவர்களின் உறுதியையும் எனக்குப் புரியவைத்தது.
தற்போது ஆஷா குடிசைப் பகுதிகளில் சுகாதார மையம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்மூலம் குழந்தைகள் இறப்புவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குழந்தைகள், பெண்களுக்கு நிதி, கல்லூரி செல்வோருக்கு வழிகாட்டுதல் திட்டங்களைக் கொண்டுள்ளது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.