ஜெயலலிதா மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: எய்ம்ஸ் அறிக்கை !!

மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவனை அறிக்கை வெளியிட்டது. செப்.22-ம் தேதி இரவு 10 மணிக்கு முதல்வரின் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப அவசர அழைப்பு வந்தது. ஆம்புலன்ஸ் சென்ற போது மயக்க நிலையில் ஜெயலலிதா இருந்தார்.  மேலும் அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் அறிக்கையின் படி ஜெயலலிதா

தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிட்டார்.

ஜெயலலிதாவுக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தன. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைப்பது மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது.

*சிகிச்சை விவரம்*

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். பின்னர் லண்டன் டாக்டர் ரிச்சர்டும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும் தமிழக அரசு கேட்டு கொண்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெ.வுக்கு சில காலம் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதா என்று ஆராயப்பட்டது. நீரிழிவு, ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த 'hypoglycemic' என்ற மருந்தை ஜெ. உட்கொண்டார். தீவிர சிகிச்சைப்பின் ஜெ. உடல் நிலை தேறிய வந்தது. அதன் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...