முதிர்ந்த தமிழறிஞர்கள் : உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் மாத உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உதவித் தொகையை பெற, ஜூன் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப

படிவத்தை www.tamilvalarchithurai.org என்னும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் வயது, வருமான சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழறிஞர்கள் 2 பேரிடம் தகுதி நிலைச் சான்று பெற்று இணைக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.36 ஆயிரத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் 2,000 ரூபாய், மருத்துவப்படியாக 100 ரூபாயுடன், இலவச பஸ் பாஸ் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல்தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600 008 என்ற முகவரிக்கு வரும் ஜூம் 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...