திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட 4 வாரம் கெடு!!!

திருநங்கைகளுக்கு நான்கு வாரங்களில் தனி கழிப்பறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டள்ளது.

திருநங்கைகளுக்கு தனிகழிப்பறை கட்ட உத்தவிடகோரி சென்னை ஐகோர்ட்டில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சென்னையில் திருநங்கைகள் அதிகம் வசிக்கும் தண்டையார்பேட்டை,
சூளைமேடு, புளியந்தோப்பு, சைதாப்பேட்டை உள்ளிட்ட 4 பகுதிகளில் தனிக்கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் தனிக்கழிப்பறை கட்ட 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. 4 வாரத்திற்கு பின்னர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...