5 நகரத்தில் தினமும் மாறுது பெட்ரோல் விலை!!!

புதுச்சேரி உட்பட, நாட்டில் உள்ள ஐந்து நகரங்களில், மே, 1ம் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை கரன்சி மதிப்பு மாற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. இனிமேல், தங்கம் விலை போல், பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மாற்றி அமைக்க இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஐந்து நகரங்கள்

முதல் கட்டமாக, புதுச்சேரி, ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், ராஜஸ்தானில் உள்ள உதய்பூர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ெஷட் பூர், அரியானாவில் உள்ள சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில், மே, 1ம் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், 90 சதவீதம், இந்த மூன்று நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலே குறிப்பிட்ட ஐந்து நகரங்களில், 200 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செ்யது, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...