மாநில தேர்தல் கமிஷனர் பதவி காலி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் சிக்கல்!!!

மாநில தேர்தல் கமிஷனர் பதவி காலியாக இருப்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி,
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாநில தேர்தல் கமிஷனராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சீதாராமன், 2015ல் நியமிக்கப்பட்டார். இவரது இரண்டாண்டு பதவிக்காலம், மார்ச், 21ல் முடிவடைந்தது.

பதவி நீட்டிப்பு பெற, சீதாராமன் முயற்சித்தும் பலன் இல்லை. இதனால், தன் பொறுப்புகளை, மற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், 'உள்ளாட்சி தேர்தலை,மே, 14க்குள் நடத்தி முடிக்க வேண்டும்; இல்லையெனில், நீதி மன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும்' என, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் பொறுப்பு, மாநில தேர்தல் கமிஷனரிடம் உள்ளது. கமிஷனர் பதவி காலியாக இருப்பதால், தேர்தலை அறிவிப் பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் உயரதிகாரிகளும், தேர்லை நடத்து வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இதனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதே
நேரத்தில், புதிய தேர்தல் கமிஷனரை நியமிக் கும் அதிகாரம், கவர்னர் கையில் உள்ளது. இப் பிரச்னையில் கவர்னர் தலையிட்டால் மட்டுமே, நீதிமன்ற அவமதிப்பில் இருந்து, மாநில தேர்தல் கமிஷன் தப்ப வாய்ப்புள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...