சுந்தரனார் பல்கலை.யில் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா கல்வி: நாட்டிலேயே முதன்முறை; நடப்பு கல்வியாண்டில் அமல் !!!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், நடப்பு கல்வியாண்டு முதல் (2017-18) அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக இப்பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சுற்றுப் பகுதி மாவட்டங்களில் உயர்கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் இப்பல்கலைக்கழகம், வெள்ளிவிழாவை கொண்டாடி வருகிறது. இங்கு கலை, அறிவியல் படிப்புகளில் மேற்படிப்புகளும், இளநிலை ஆய்வுப் பட்டங்களும் கற்றுத்தரப்படுகின்றன. வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், ஆராய்ச்சிகளுக்கு துணையாகவும் செயற்கைக்கோள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படுருகிறது. மேலும், நாட்டிலேயே முதன்முறையாக பல்கலைக்கழகத்துடன் மாணவர்களது தொடர்பு நடவடிக்கைகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம், மதிப்பெண் சான்று, ஆவணங்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் என அனைத்தும் ஆன்லைன் முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டச் சான்று மட்டுமே நேரில் வழங்கப்படும். இதர தேவைகளுக்கு பல்கலைக்கழகத் துறைகளுக்கு தேவையின்றி செல்ல வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே கணினி மூலம் அனைத்து விவரங்களையும் பெறலாம்.
இதன் தொடர்ச்சியாக, நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான கட்டணமில்லா கல்வித் திட்டத்தையும் நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்துகிறது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழகப் பதிவாளர் ஆ. ஜான் டி பிரிட்டோ கூறியது:
மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு இலவச உயர்கல்வி வழங்க சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, திருநெல்வேலியில் கடந்த மார்ச் 29இல் நடைபெற்ற திருநங்கைகள் மாநாட்டில் துணைவேந்தர் கி. பாஸ்கர் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தில் கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இளநிலை, முதுநிலை வகுப்புகளில் பல்வேறு பிரிவுகளில் இலவச கல்வி வழங்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. இதன்படி, பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட சுயநிதிக் கல்லூரிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பிரிவில் இணைந்து பயிலும் மாணவர்களுக்கு அவரவர் கல்வி பயிலும் இடங்களில் பிரத்யேக ஓய்வறை வசதியும் செய்துதரப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதியான மருத்துவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் உரிய சான்றுகள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். திருநங்கைகள் அனைத்து வகை உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றால், இந்த சமூகத்தில் மதிப்புமிக்கோராக வாழ வாய்ப்பாக அமையும். இத்திட்டத்தில் கல்வி பயிலும் திருநங்கைகளில் ஆண்டுதோறும் ஒருவரை ஸ்காட் கல்விக் குழுமங்கள் தத்தெடுத்து அவரது வாழ்வாதாரத்துக்கான இதர செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. எனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...