ஆதார் கார்டில் இன்று முதல் திருத்தம் செய்யலாம்!!!

ஆதார் கார்டில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை இன்று(ஏப்.,17) முதல் நிரந்தர ஆதார் மையங்களில் சென்று திருத்தம் செய்துகொள்ளலாம்.


இது குறித்து தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களில், ஏப்., 17ம் தேதி(இன்று) முதல் பொதுமக்கள் ஆதார் விபரங்களை திருத்தம் செய்துகொள்ளலாம். விபரங்களை திருத்தம் செய்துகொள்ள கட்டணமாக 25 ரூபாயும், ஆதார் அட்டையை அச்சிட்டு பெறுவதற்கு 10 ரூபாயும் கட்டணமாக பெறப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...