பாராளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் ஜனாதிபதி பேச்சு!!!

பெருகியுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

டெல்லியில் கருத்தரங்கு
டெல்லியில் நேற்று ‘தேர்தல் பிரச்சினைகள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.


இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பேசும்போது, ‘‘தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் விடப்படுவது என்பது வாடிக்கையாகி விட்டது. தேர்தல் அறிக்கைகள் வெறும் காகிதங்களாகவே அமைந்து விடுகின்றன. இதில் அரசியல் கட்சிகளை பொறுப்பேற்க வைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

பொறுப்பு இல்லை
அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

இந்த கருத்தரங்கில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அரசியல் கட்சிகளை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்பதை பொருத்தமாகவும், உறுதியாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தற்போதைய இந்திய பாராளுமன்ற அமைப்பில், ஏதாவது ஒரு கட்சி 100–க்கு 51 இடங்களை (மெஜாரிட்டி) பெற்று, எல்லா உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற்று விடுகிறது. நமது தேர்தல் அமைப்பில், 51 சதவீதத்துக்கு குறைவான இடங்களை பிடித்த கட்சிகளும் எல்லா உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற்று விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு பொறுப்பு கிடையாது.

மக்கள் தொகை பெருக்கம்
நமது அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில், நமது தேர்தல் முறை எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதை நாம் நடுநிலைப்பார்வையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

1971–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போதைய பாராளுமன்றம் இயங்குகிறது. ஆனால் நமது மக்கள்தொகை தசாப்தங்களில் (ஒரு தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) பல மடங்கு பெருகி விட்டது.

543 பிரதிநிதிகள்தான்
இந்தியாவில் 80 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 128 கோடி மக்களின் பிரதிநிதிகளாக 543 எம்.பி.க்கள் உள்ளனர். மக்களின் விருப்பங்களை உண்மையாக பிரதிபலிக்க வேண்டும் என்றால், நமது பாராளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான சட்டப்பிரிவுகள் பற்றி ஆராய வேண்டும்.

இங்கிலாந்தில் 600–க்கும் மேற்பட்ட பாராளுமன்ற இடங்கள் இருக்கிறபோது, நமது நாட்டில் இவ்வளவு மக்கள் தொகை இருக்கிறபோது பாராளுமன்ற இடங்களை ஏன் அதிகரிக்கக்கூடாது?

‘நீதி வழங்கும்’
இந்திய ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு வலுவான தேர்தல் அமைப்பும், சரியான நேரத்தில் சீர்திருத்தங்களும் செய்யப்பட வேண்டும்.

சரியான நேரத்தில் செய்யப்படுகிற தேர்தல் சீர்திருத்தங்கள்தான் மக்களுக்கும், இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கும் நீதி வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...