செல்லாத நோட்டை என்ன செய்தீர்கள்?; நிறுவனங்களுக்கு துவங்கியது குடைச்சல்!!!

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



ஆண்டு வரவு - செலவு கணக்கில் இது இடம்பெற்றுள்ளதா என்பதை ஆடிட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 2016, நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, டிச., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம், நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு காலத்தின் போது, கையில் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எப்படி பயன்படுத்தப்பட்டது; எவ்வளவு தொகை, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை, ஒவ்வொரு நிறுவனமும், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வரவு - செலவு கணக்கு அறிக்கையின்போது, இந்த விபரங்களையும் அளிக்க வேண்டும்.

மேலும், நவ., 8 மற்றும் டிச., 30ம் தேதிகளில், கையில் இருந்த ரொக்கம் குறித்த விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். நிறுவனங்கள் இந்தத் தகவல்கள் அளிப்பதை, ஆடிட்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையில், ஆடிட்டர்களின் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர் மையமும், இது குறித்து தன் உறுப்பினர்களுக்கு தனியாக கடிதம் எழுதியுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...