உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி விரைவில் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி விரைவில் பதவியேற்கவுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி விடைபெற்றுச் சென்றார். இதைத் தொடர்ந்து, சென்னை
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக குலுவாடி ரமேஷ் செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் இந்திரா பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2002ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். பின், கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, விரைவில் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

மேலும், கடந்த மார்ச் 14ஆம் தேதி நீதிபதி ஆர்.மாலாவும், மார்ச் 28ஆம் தேதி நீதிபதிகள் சொக்கலிங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பணி ஓய்வு பெற்ற நிலையில் 55ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 52ஆக குறைந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கவேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால் தற்போது 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...