ராமமோகன ராவுக்கு பணியிடம் ஒதுக்கீடு!!!

வருமான வரி சோதனை காரணமாக, தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட ராமமோகன ராவ், மூன்று மாதங்களுக்கு பின், தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தும், புதிய தலைமைச்
செயலராக, ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார்.

அவரது வீட்டில், 2016 டிசம்பரில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமை
செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

புதிய தலைமைச் செயலராக, கிரிஜா வைத்திய நாதன் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்களாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம மோகன ராவ், நேற்று முன்தினம், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குன ராக நியமிக்கப்பட்டார்.

அப்பதவியில் இருந்த ராஜாராமன், நில நிர்வாகத் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள் ளார். மாநில மனித உரிமை கமிஷன் செயலராகஇருந்த அசோக் ரஞ்சன் மொகந்தி, தொல்லியல் துறை கமிஷனரா கவும்; பொதுத்துறை துணை கமிஷனர் திவ்யதர் ஷினி, மாநில மனித உரிமை கமிஷன் செயலராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராவுக்கு மீண்டும் பணி வழங்க என்ன நிர்ப்பந்தம்: ஸ்டாலின்

'ராமமோகன ராவுக்கு, மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்ப்பந்தமும் என்ன என்பதை, முதல்வர் பழனிசாமி தெரிவிக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:

வருமான வரி சோதனைக்குப் பின், ராம மோகன ராவ், தலைமை செயலர் பதவியி லிருந்து மாற்றப் பட்டார். முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தவரை, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ள வில்லை. 'எனக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர் பில்லை' என, பன்னீர்செல்வம் சொன்ன மாதிரி தான், ராமமோகன ராவும் கூறினார்.

யாருக்கு விடுத்த மிரட்டலால், இப்போது, ராமமோகன ராவிற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனர் பதவி வழங்கப்பட்டு உள்ளது; இதை பார்க்கும் போது, ராமமோகன ராவுக்கு, மாநிலத்தில் மட்டுமல்ல,- மத்தியி லும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டு கிறது. ராமமோகன ராவிற்கு, மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்ப்பந்தமும் என்ன என்பதை, தமிழக மக்களுக்கு வெளிப் படையாக, முதல்வர் பழனிசாமி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...