பள்ளி கல்வி இயக்குநர் பதவியேற்பு !!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நேற்று முன்தினம் 6 இயக்குநர்களை அதிரடியாக மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் உத்தரவிட்டு  இருந்தார். இதன்படி அவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். குறிப்பாக புதிய பள்ளிக் கல்வி இயக்குநராக இளங்கோவன், மத்திய இடைநிலைக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநராக கண்ணப்பன்,

தொடக்க கல்வி இயக்குநராக கார்மேகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநராக அறிவொளி, மாநில வயது வந்தோர் கல்வித்துறை இயக்குநராக ராமேஸ்வர முருகன், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளராக பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர்களை அந்தந்த துறையின் அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...