எதற்கு தனியார்பள்ளிகள் ஓர் கட்டுரை !!

நீளமான பதிவுதான்..அவசியம் படிங்க..

என் பையன் சரளமா ஆங்கிலம் பேசனும்..
+2 ல அதிக மார்க் வாங்கனும்..காலேஜ் கேம்பஸ் இன்டர்வ்யூல செலக்ட் ஆகனும்..கைநிறைய சம்பளம் தர்ற நிறுவனத்துல வேலைக்கு சேரணும்..
கார்வாங்கனும்..வீடுவாங்கனும்..கல்யாணம்
பண்ணி சந்தோஷமாஇருக்கனும்..உங்களோட ஆசைகள் நியாயமானதுதான்..ஆனா,அது மடடும்தான் வாழ்க்கையா?.


இதெல்லாம் கிடைக்க நீங்க தேர்ந்தெடுக்கிற எளிதான வழி "தனியார் பள்ளிகள்"..

கல்வியை வியாபாரமா பண்ற அவங்ககிட்ட
நீங்க பணத்தை மட்டுமல்ல..உங்க
பசங்களோட சுதந்திரத்தையும்
சேர்த்து முதலீடு பண்றீங்க..அதோட விளைவா நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை அவங்களுக்கு கிடைக்கும்..ஆனா,சாதரண மனித வாழ்க்கையா இருக்காது..நிச்சயமா ஒரு இயந்திர வாழ்க்கையாதான் இருக்கும்..

சமீபத்துல மும்பையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இந்திய அளவுல தனியார் பள்ளிகள் மாணவர்கள்கிட்ட ஆய்வு நடத்தினாங்க..அதிர்ச்சியின் உச்சம்தான் அது.."32% மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுருக்காங்க"னு சொல்லுது அந்த ஆய்வோட முடிவுகள்..

"அப்படிலாம் இல்ல..பிரைவட் ஸ்கூல்ல படிக்கிற என் பையனும்,பொண்ணும் சந்தோஷமாதான் இருங்க்காங்க"னு நீங்க சொல்லலாம்..மன அழுத்தத்துல இருக்கவங்க எந்நேரமும் ஏதோ பறிகொடுத்த மாதிரியே இருக்கனும்னுஅவசியமில்லையே!?..
ஒருவேளை உங்க பிள்ளைங்க அந்த நோயோட ஆரம்ப ஸ்டேஜ்லகூட இருக்கலாம்..

கல்லூரி படிப்புக்கும்,கல்யாணத்திற்கும் இடையில சிலகாலம் பொழுதுபோக்காக வேலை பார்க்கிற தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்புற நீங்க..வருஷக்கணக்குல மாணவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்க அரசு பள்ளி ஆசிரியர்களை ஏன் நம்ப மாட்றீங்க?.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கல்வியை மட்டும்தான் கத்துக்கொடுப்பாங்க..அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வியோட சுயசிந்தனை,பொது அறிவு,ஒழுக்கம்,பொறுப்பு,தன்னம்பிக்கைனு ஒரு மனுஷனுக்கு தேவையான எல்லாத்தையும் கத்துக்கொடுப்பாங்க..இதுல வேதனையான விஷயம் என்னன்னா 90% அரசு ஆசிரியர்களே அவங்க குழந்தைங்களை தனியார் பள்ளிகள்ல படிக்கவெக்கிறதுதான்..

ஜாதி,மதங்களை கடந்து பலதரப்பட்ட மாணவர்கள் அரசுப்பள்ளிகள்லதான் படிக்கிறாங்க..ஜாதி,மதங்களை எப்பவும் ஒழிக்கமுடியாது..ஆனா,அந்த பலதரப்பட்ட மாணவர்கள்கூட பழகும் போது அவங்களுக்கு தானாகவே மற்ற ஜாதிகள்,மதங்கள் மேல நல்ல மதிப்பும் மரியாதையும் வளரும்..தனியார் பள்ளிகளால அது முடியாது..ஏன்னா,அவங்களோட 70% சேர்க்கையே ஜாதி,மத அடிப்படைலதான் நடக்குது..

கூட படிக்கிற ஏழை குடும்பத்து பசங்களை பார்த்து வறுமைனா என்னனு புரிஞ்சிப்பாங்க..கஷ்டம்னா என்னனு புரிஞ்சிப்பாங்க..பணத்தோட அருமையை தெரிஞ்சிப்பாங்க..Term Fees,Coaching Fees அது,இதுனு பிரைவைட் ஸ்கூல்காரங்க டைரில எழுதிக்கொடுத்தவுடனே நீங்களும் பணத்தை அள்ளி வீசுறீங்க..அப்புறம் எப்படி அவங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியும்?.."வறுமை,கஷ்டம்,பணத்தோட அருமை" இந்த மூணையும் விடவா நீங்களும் உங்க பிரைவைட் ஸ்கூல்ஸும் அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுத்திறப்போறீங்க..

மதிப்பெண்கள் அடிப்படையிலும் அரசு பள்ளிகள் சளைத்தவை அல்ல..பத்தாவதுல முதல் மார்க் வாங்கிற அரசு பள்ளி மாணவர்களை தூக்கிட்டு போய்தான் +2 ல முதல் மார்க் வாங்குறாங்க தனியார் பள்ளிகள்.. 60,70 வருஷ மனுஷவாழ்க்கையை 10,+2னு வெரும் 2 வருஷ மதிப்பெண்கள்தான் தீர்மானிக்குதுன்றதை என்னால ஏத்துக்க முடியல..

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமா எல்லாவருஷமும் அரசு பள்ளிகளை கொஞ்சம்,கொஞ்சமா இழுத்து மூடிட்டு வர்றாங்க..பணம் இருக்க நீங்க பிரைவைட் ஸ்கூல்ல சேர்த்தி படிக்க வெக்கலாம்..ஆனா,ஏழைங்களால முடியாது..இதனாலயே நிறைய பசங்க படிப்பை பாதில நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் வருது..ஏழைக்குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியே இப்ப கேள்விகுறி ஆயிடுச்சு..

கவர்மென்ட் ஸ்கூல்ல கழிவரை சரியில்லை, காம்பவுன்ட் சுவர் இல்ல,தண்ணி வரலனு நிறைய பிரச்சனைகள்..நீங்க தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கிற பணத்துல 10% செலவு பண்ணிங்கானா இந்தமாதிரி பிரச்சனைகளையெல்லாம் சுலபமா தீர்த்துடலாம்..மாணவர்களுக்கும் பெரிய உதவியா இருக்கும்..

ஜல்லிக்கட்டு, நெடுவாசல்,விவசாயம், காவிரி போன்ற பிரச்சனைகளை விட மிகமுக்கியமானது அரசு பள்ளிகளின் அழிவு..மற்ற பிரச்சனைகளுக்கெல்லாம் அரசாங்கம் மனசு வெச்சாதான் தீர்வு கிடைக்கும்..ஆனா,அரசு பள்ளிகளை அழிவிலிருந்து காப்பாத்த நம்ம ஒவ்வொருத்தரும் மனசு வெச்சா போதும்..

பிள்ளைங்களை கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்க்கிறதுல மிகப்பெரிய பிரச்சனையே பெண்கள்தான்..ஆண்கள் இதுக்கு தயாரான கூட பக்கத்துவீட்டு பையனும்,பொண்ணும்  பிரைவைட் ஸ்கூல்ல படிக்கிறாங்கன்ற ஈகோ அவங்களை விடாது..பிரைவைட் ஸ்கூலுக்கு போய்தான் பிள்ளைகள் ஆங்கிலம் கத்துக்கனும்னு சட்டம் ஒண்ணும் இல்ல..தினமும் ஒரு மணிநேரம் ட்யூஷன் அனுப்பிகூட படிக்கவைக்கலாம்..

தனியார் பள்ளிகள் சுயநலவாழ்க்கையை கற்றுக்கொடுக்கும்..அரசு பள்ளிகள்
பொதுநல வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும்..அவங்களுக்கு சுயநலத்தை கத்துகொடுத்து இதான் வாழ்க்கைனு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள அடைச்சிராதீங்க..

உங்க பிள்ளைங்க வாழ்க்கை எப்படி அமையனும்னு நீங்க முடிவு பண்ணவேண்டிய சரியான நேரம் இதுதான்..ஸ்கூல் ஆரம்பிக்க இன்னும் நிறைய நாள் இருக்கு..நல்லா யோசிங்க..கலந்து பேசுங்க...அப்பவும் எங்களால எந்தமுடிவும் எடுக்க முடியலைனு சொல்ரவங்க இந்த ஒரு வருஷம் மட்டும் அவங்களை பிரைவைட் ஸ்கூல்லிருந்து கவர்மென்ட் ஸ்கூலுக்கு மாத்துங்க..அடுத்த வருஷம் அவங்களே முடிவு பண்ணட்டும்..

கவர்மென்ட் ஸ்கூலா,பிரைவைட் ஸ்கூலானு.

#Save_Government_Schools ❤
#I_Support_Government_Schools ❤
- Bala S

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...