முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள்... 'சஸ்பெண்ட்!':ஆதார் அட்டை ஆணையம் அதிரடி நடவடிக்கை!!!

ஆதார் அட்டை பதிவிற்கு பணம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்ட, 1,000 தனியார் ஒப்பந்த நிறுவனங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன; 20 பேருக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், நாட்டு மக்கள்
அனைவருக்கும், இலவசமாக, ஆதார் அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. இந்த ஆணையத்திற்காக, பொதுமக்களின் ஆதார் தகவல்களை பதிவு செய்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, நாடு முழுவதும், ஏராளமான தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றன.

கிரிக்கெட் வீரர் தோனி

இந்நிலையில், ஆதார் அட்டை தகவல்களை பதிவு செய்வதற்காக, பல நிறுவனங்கள், பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. மேலும், பல்வேறு முறைகேடுகளில் இந்த ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஆதார் அட்டைக்காக தகவல்களை பதிவு செய்தபோது, அது பற்றிய விபரங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார் அட்டை பதிவுக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் தான், தோனி பற்றிய தகவல்களை வெளியிட் டது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேடு களில் ஈடுபட்ட, 1,000 ஒப்பந்த நிறுவனங்களை, ஆதார் ஆணையம் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. பொதுமக்களிடம், ஆதார் தகவல்களை பதிவு செய்ய பணம் வாங்கிய, 19 பேருக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அனுமதிக்க மாட்டோம்


இது குறித்து, ஆதார் ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:ஆதார் அடையாள அட்டையை, எந்தவித முறைகேடு களும் இன்றி, பொதுமக்களுக்கு வழங்குவதில் உறுதியாக உள்ளோம். முறைகேடுகள் நடப்பதை, 1 சதவீதம் கூட அனுமதிக்க மாட்டோம்.

கடந்த, 2016, டிசம்பர் முதல், மூன்று மாதங்களில், நாடு முழுவதும், ஆதார் அட்டை தகவல் பதிவு செய்ய, பணம் வசூலித்த, 1,000 ஒப்பந்த நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, ஆதார் தகவல்களில் திருத்தம் செய்ய, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான, 25 ரூபாயை விட, கூடுதலாக வசூலித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள், ஆதார் தொடர்பான பணிகளை செய்து தரும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன; அந்நிறுவனங்
களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில், எந்த இடத்திலும், ஆதார் தொடர்பான பணிகளை, இந்த ஒப்பந்த நிறுவனங்கள் செய்ய முடியாது. அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்ட, 20 பேருக்கு எதிராக, புகார்கள் அளிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான நடவடிக்கைகளால், வருங்காலத்தில் தவறுகள் நடக்காது என நம்புகிறோம்.இவ்வாறு அஜய் பூஷண் பாண்டே கூறினார்.

ஆதாருடன் 'பான் எண்ணை இணைக்க புதிய வசதி

'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள அட்டையுடன் எளிதில் ஒருங்கிணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.'பான்' கார்டில் இடம்பெற்றுள்ள பெயர் களில் உள்ள எழுத்துக்கள், ஆதார் அட்டையில் உள்ள பெயர் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளில்
மாறுபட்டிருந்தால், பான் - ஆதார் எண்களை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்துவந்தது. இதற்கு தீர்வாக, புதிய வசதி ஏற்படுத் தப்பட்டுள் ளது. ஆதார் இணையதளத்தில், 'ஸ்கேன்' செய்த, பான் அட்டை நகலை பதிவேற்றி, ஆதார் எண்ணுடன், பான் எண்ணை ஒருங்கிணைக்கலாம்.

மேலும், வருமான வரி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வோர், தங்கள் பெயர்களில் திருத்தம் செய்யாமல், ஆதாருடன் இணைப் பதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த, வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. ஆண்டு கணக்கு தாக்கல் செய்வோரின், ஆதார் மற்றும் பான் அட்டைகளில் ஒரே மாதிரியான, பிறந்த தேதி இடம்பெற்றிருந்தால், அவர்க ளுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, 'பாஸ்வேர்டு' அனுப்பப் படும். அதை பயன்படுத்தி, ஆதாருடன், பான் எண்ணை ஒருங்கிணைக்கலாம்.

4 லட்சம் நிறுவனங்கள்

ஆதார் திட்டம் துவக்கப்பட்டது முதல், ஆதார் ஆணைய பணிகளுக்கு உதவ, ஒப்பந்த அடிப்படையில், நான்கு லட்சம் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. ஆதார் தகவல் பதிவு தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இதுவரை, 34 ஆயிரம் நிறுவனங்களுக்கு எதிராக, ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்திய தகவல்படி, நாடு முழுவதும், 113 கோடி ஆதார் அடையாள அட்டைகள், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆதார் பதிவுகளை வைத்து, 500 கோடி முறை, அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...