வேளாண் படிப்புக்கு மவுசு; 21 ஆயிரம் பேர் விண்ணப்பம் !!

மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், வேளாண் படிப்புகளுக்கு, நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கோவை, வேளாண் பல்கலையில், 12ல், வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. கடந்த நான்கு நாட்களில், 12 ஆயிரத்து, 487 மாணவியர்,
9,238 மாணவர்கள், ஒரு திருநங்கை என, 21 ஆயிரத்து, 726 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்தாண்டு, வேளாண் படிப்புக்கு, மொத்தமாக, 36 ஆயிரத்து, 322 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் நாட்களில், எண்ணிக்கைஅதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறுகையில், "மாணவர்கள், பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள ஆர்வமே இதற்கு காரணம்.

நடப்பாண்டு, 60 ஆயிரம் பேர் வரை, விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும்," என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...