சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது???

'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


குழப்பம்:

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

விளக்கம்:

இந்நிலையில், ''இது போன்ற தகவல்களால், மாணவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி, தீவிர கதியில் நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்; அதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...