ஃபேஸ்புக்கில் புதிதாக 3,000 சென்சார் பணியாளர்கள்!!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளமாக ஃபேஸ்புக் உள்ளது. தேவையான அப்டேட்களை பயனாளர்களுக்கு அடுத்தடுத்து வழங்கிவரும் ஃபேஸ்புக்கின் லைவ் வீடியோ வசதி மிகவும் பிரபலமாக உள்ளது. முக்கியமான நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து

கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆப்ஷன், தற்போது சில மோசமான காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் கொலை செய்வதை லைவ் வீடியோவாக கொலையாளிகள் ஒளிபரப்பினர். இது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியா உட்பட சில நாடுகளில் தற்கொலை செய்வோர் தங்களது தற்கொலைகளை லைவ் ஆக ஒளிபரப்பினர். இதுகுறித்து வந்துள்ள புகார்களைப் பரிசீலித்த ஃபேஸ்புக் நிர்வாகம் மேற்கண்ட லைவ் வீடியோக்கள், கொலை, விபத்து மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்தக் கூடுதலாக 3,000 பணியாளர்களை நியமிக்க முன்வந்துள்ளது. இவர்கள் மூலம் அந்த வீடியோக்கள் ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் முதலீட்டாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இது போன்ற வீடியோக்களை நீக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...