இந்தியா முழுவதும் 60,000 நீதிபதி பணியிடங்கள் காலி !!

கோவை சட்டக்கல்லூரியில், முதல்முறையாக 'முதல் பட்டம் வழங்கும் விழா', பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது.
தமிழக சட்ட கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். கடந்த 1997ம் ஆண்டு முதல் 2015 வரை கோவை சட்டக்கல்லூரியில் சட்டம்
முடித்த 772 பேருக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பட்டம் வழங்கினார்.
அப்போது, அவர் பேசுகையில், வழக்குரைஞர் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கடின உழைப்புடன் படித்தால் சிறந்த நீதிபதியாகவோ, வழக்குரைஞர்களாக வரவோ முடியும்.
இந்தியா முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 60 ஆயிரம் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது' என்று குறிப்பிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...