பஸ் 'ஸ்டிரைக்'; அரசு மெத்தனம் !!

ஒரு மாதத்திற்கும் முன்பாகவே, தொழிற்சங்கத்தினர், 'ஸ்டிரைக்' நடத்துவதில் மும்முரமாக இயங்கினர். அதற்கான கூட்டங்களை, தொடர்ச்சியாக நடத்தினர்.
இந்நிலையில், அ.தி.மு.க., அணிகளின் இணைப்பு முயற்சி நடந்தது. அதனால், தொழிற்சங்கத்தினருடன் உரிய பேச்சு நடத்தவில்லை. ஐந்து நாட்களுக்கு முன் தான், 500 கோடி ஒதுக்குவதாகவும், பின், 750 கோடி ஒதுக்குவதாகவும்
அறிவித்தது. நேற்று மேலும், 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது.
இதுபற்றி, ஊழியர்களிடம் எடுத்துக்கூற, ஆளும் கட்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நேரம் இல்லை. 2011ல், ஒரு பணிமனைக்கு, 80க்கும் அதிகமான தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றினர். அப்போதைய ஸ்டிரைக்கில், அவர்களை பயன்படுத்தி, பஸ்களை இயக்கினர்.
தற்போது, தினக்கூலி ஊழியர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவு என்பதால், இரு தினங்களுக்கு முன், நிரந்தர பணியாளர்களிடம், பணிக்கு வரும்படி, வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி உள்ளனர். இதனால், அவர்களுக்கு இரண்டு, 'ஷிப்ட்' பணி வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, தினக்கூலி ஊழியர்களை போல, நான்கு மடங்கு ஊதியம் வழங்க வேண்டி உள்ளது.
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால், பயணிகளுக்கு பாதுகாப்பான சேவை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இன்று பஸ் இயக்குவதாக உறுதி அளித்துள்ள சங்கங்களில் பல, 'லெட்டர் பேடு' சங்கங்களே. அவர்களை நம்பி, பஸ்சை இயக்குவது அரசின் பலவீனம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...