தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மாநிலத்தில் அதிகப்பட்சமாக திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். வெப்ப சலனம் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.
உள்மாவட்டங்களில் சூறை காற்றுடன், பலத்த மழை பெய்யும். வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.