அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழகம் பதிலளிக்கும்படி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலை கழகத்திற்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் அந்தப் பதவிகள் காலியாக உள்ளன. இதனால்
பல்கலைக்கழக நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராஜாராம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. துணை வேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.
இதனால் உயர்படிப்பை மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எம்.இ., எம்.பி.ஏ., வெளிநாடுகளில் எம்.எஸ். போன்ற படிப்பை தொடர முடியாமல் முட்டு கட்டை விழுந்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
அதேசமயம், துணை வேந்தர் இல்லாத நிலையில் அவருக்கு மாற்றாக வேறு ஒரு உயர் அதிகாரியை கொண்டு பட்ட சான்றிதழில் கையெழுத்திட்டு பட்டமளிப்பு விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பல்கலைக்கழகத்தின் சான்றிதழில் துணை வேந்தர் கையொப்பம் முக்கியமானது. அதில் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோரின் கையொப்பம் இருந்தாலும் கூட துணை வேந்தரின் கையெழுத்திற்கு தான் அதிக அதிகாரமும் மதிப்பும் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குள்ளாக துணை வேந்தர் நியமிக்கப்படுவாரா? அவரது கையெழுத்துடன் பட்டம் தங்களுக்கு கிடைக்குமா? என்ற ஆவலில் மாணவ- மாணவிகள் காத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உயர்கல்வித் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது.