தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் பயணம் !!

தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்கிறார்கள்.

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த
கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 5 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் ஊட்டி அரசு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அருண், 10-ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...