மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' !!

மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது.
இதில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 'ஸ்டெம்செல்'மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைஉள்ளிட்ட 1,016 வகை நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, 216 வகையான, சமீபத்திய மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணிகள், கிராமங்கள் தோறும் நடக்கின்றன. இதற்காக, திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இருந்தாலும், 40 சதவீத இணைப்பு பணிகளே, தற்போது வரை நடந்துள்ளன. எனவே, இணைப்புப் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், பயனீட்டாளர்கள், தாங்களே மருத்துவ காப்பீட்டு விபரங்களுடன், ஆதார் விபரங்களை இணைத்துக் கொள்ளலாம் என, அரசு அறிவித்தது. இதற்கு வசதியாக புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திட்ட அலுவலர்கள் கூறியதாவது:

பயனீட்டாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். பயனீட்டாளர்கள், www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு சென்று, cmchis online என்ற இணைப்பை, 'க்ளிக்' செய்தால், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்யலாம். அதில், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையில் உள்ள, 22 இலக்க எண்ணை பதிவு செய்து, ஆதார் விபரங்களுடன், மருத்துவ காப்பீட்டு விபரங்களை தாங்களாகவே இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...