கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் நேற்று நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக
முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி புதிய ஊதிய குழு அமைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கைகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.