கல்வி நிறுவன டிரைவர்களை பயன்படுத்த பட்டியல் தயாராகுது..!

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டம் நீடித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் கல்வி நிறுவன பஸ் டிரைவர்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்களை பயன்படுத்தி பஸ்களை இயக்க, வட்டார போக்குவரத்துத் துறை மூலம் பட்டியல் தயாராகி வருகிறது. தற்போது, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் சிக்கல் இல்லாமல் பஸ்களை இயக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மாவட்ட வாரியாக ஓட்டுனர் பயிற்சி முடித்து, சமீபத்தில் பதிவு செய்தவர்களின், 100 பேர் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...