செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு ஆபத்தா? செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு ஆபத்தா?

ரான்ஸ்டேட் (Randstad) என்பது நெதர்லாந்தைச் சேர்ந்த மனிதவள ஆலோசனை நிறுவனமாகும். சர்வதேச அளவில் மனிதவள ஆலோசனையில் இரண்டாவது இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுக்கான தலைவராக பால் டுபுயிஸ் சமீபத்தில் பதவியேற்றுள்ளார். பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் ஊடகத்துக்குச் சமீபத்தில் அவர் பேட்டியளித்திருந்தார். அதில், முக்கியமான பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இயந்திரங்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து என்ன கூறுகிறீர்கள்? அதனால் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் விளைவுகள் என்ன?

ரோபோக்களை பட்டறையில் அறிமுகப்படுத்தியபோது, அது பல உயர் திறமையான வேலைகளை உருவாக்கியது. எனினும், மனிதர்கள்தான் ரோபோக்களை வடிவமைக்க வேண்டும், உருவாக்க வேண்டும் மற்றும் அதைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் கட்டுப்பாடு எப்போதும் மனிதர்களால் நிர்வகிக்கப்பட்டது. எனவே, இயந்திரங்களால் மனிதர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற கூற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உண்மையைக் கூறவேண்டுமென்றால், இயந்திரங்கள் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்நேரத்தில் ஊழியர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

சுறுசுறுப்பாக இருங்கள். மீண்டும் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளத் தயாராக இருங்கள். புதிய பொறுப்புகளுக்கு சுறுசுறுப்பான ஊழியர்கள் தேவை. இ-பேமென்ட் மற்றும் டிஜிட்டல் துறைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

இந்தியாவில் கிக் (Gig) பொருளாதாரம் (ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது) பலம் பெறுவதை நீங்கள் காண்கிறீர்களா?

ஆமாம். அது தேவையும்கூட. ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது இங்கு ஜிக் பொருளாதாரம் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...