தகுதத்தேர்வு எழுதிய பட்டதாரிகளின் வேதனை !!

தகுதித்தேர்வும், தகுதியற்ற நடைமுறைகளும்:
TNTET-2017.

காலிப்பணியிடம் ஒன்று கூட இல்லாத நிலையில் தான் இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில் விண்ணப்பக் கட்டணம் மூலம் பல மடங்கு வருவாய் அரசுக்கு....

FRISKING சோதனை என்ற பெயரில் கொடுமைகள்.
வாட்ச், கர்ச்சீப் கூட எடுத்துவரக்கூடாதென்று.
இதென்ன UPSC தேர்வா????
அங்க கூட வாட்ச் ல எலக்ட்ரானிக் வாட்ச் மட்டும் தான் தடை.

விண்ணப்பித்த ஊரில் சென்டர் போடாமல் மாற்று ஊர்களுக்கு அலைய வைத்த கொடுமை வேறு.

6390 பணியிடங்கள்ல ஒண்ணு கூட TET க்கு கிடையாது. ஆனா 6390 பணியிடங்கள் TET தேர்வு மூலமா நிரப்பப் படும்னு கல்விஅமைச்சரே கதை விடுறாப்ள

6390 பணியிடங்கள்:  PG-TRB, Polytechnic Lecturer, Special Teacher, Agri Teacher இந்த பணியிடங்களின் கூடுதல் தான்
இதில் TET தேர்வின் மூலம் நிரப்பப் படும் பணியிடம் ஒன்று கூட கிடையாது.

செயல்படாத அரசாங்கம் செயல்படுவது போல் காண்பிக்கவே TET தேர்வு, தேர்வில் Frisking சோதனை, என்று ஏமாற்று வேலைகள்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் வீட்ல வருமானவரி சோதனை பண்ணா கூட ஏதாச்சும் கிடைக்கும்.
ஆசிரியர் தேர்வெழுத வர்றவங்கள சோதனை பண்ணா என்ன கிடைக்கும்???
பி.எட் படிச்சவங்க காப்பி அடிக்கவா வர்றாங்க...

அடிக்கிற வெயிலுல கர்ச்சீப் கூட எடுத்துட்டு போகக்கூடாதுன்னு போட்டீங்களே ஒரு கண்டிசன்...

போய் ஏதாவது அணைக்கு தெர்மாகோல் போட்டு மூடுங்க மேதாவிகளா.......

தகுதித்தேர்வு என்ற பெயரில் தகுதியற்ற நடைமுறைகளால் வேதனைப்பட வைக்காதீர்கள்.

வேதனைகளுடன்....
பி.எட் பட்டதாரிகள்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...