இந்த வருடம் புதிய பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை' - பிரகாஷ் ஜவடேகர் !!

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய அவர், 'நாடு முழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்த வருடம் அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கல்லூரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏழாயிரம் கல்லுாரிகள் மட்டுமே அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை அளிக்காத நான்கு ஆயிரம் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீரப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் இருந்து தற்போது தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. வரும் வருடங்களில் இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்', எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...