மாயமான ஜே. என். யு. மாணவனை கண்டுபிடித்தால் ரூ. 10 லட்சம் பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு!!!

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. விடுதியில் தங்கி எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி படித்து வந்த நஜிப் அகமது என்ற மாணவர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மாணவனின் தாயார் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகன் காணாமல் போவதற்கு முன்பாக எங்களுடன் மொபைலில் பேசினார். அப்போது விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கின்றன. மாணவர்கள் சிலர் மீது வன்முறை தாக்குதல் நடக்கின்றன என கூறியிருந்தார்.
எனவே அவர் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. வட்டாரங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர் நஜிப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்கள், அல்லது இருக்குமிடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...