ஜூலை 17-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு !!

ஜூலை 17-ம் தேதி இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 28-ம் தேதி கடைசி நாள் என

அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 20-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீலம்சஞ்சீவ ரெட்டி மட்டுமே கடந்த 1977-ல் போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்திய குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து ஜூலை 24-ம் தேதிக்கள் புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய 60 நாட்கள் இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட வேண்டும். இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க பிரத்யேக வாக்கச்சீட்டு மற்றும் பேனா வழங்கப்படும் என்று நசிம் ஜைதி தெரிவித்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளர்கள் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள் என நசிம் ஜைதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர் இந்த தேர்தலில் அனைத்து M.L.A-க்களும், M.P-க்களும் வாக்களிக்கலாம் என்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு கடைபிடிக்கப்படும் என்றார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...