கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந் தேதி வெளியீடு!!!

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை குறித்த சர்வதேச அளவிலான கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தொடங்கி வைத்து, மலரை வெளியிட்டு பேசினார்.

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் குணசீலன், டாக்டர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பேசினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து துறை நிபுணர்கள் 22 பேர் பேசுகின்றனர்.

30-ந் தேதி தரவரிசை பட்டியல்

இந்த கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியின் முடிவில், துணைவேந்தர் திலகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் குறித்த பட்டப்படிப்பு மற்றும் 3 தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் என மொத்தம் 4 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

கால்நடை மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் ஆன்-லைனில் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது, வருகிற 30-ந் தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு அடுத்தமாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை.

சி.டி. ஸ்கேன் வசதி

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், 10 ஆம்புலன்ஸ்கள் இப்போது சேவை செய்து வருகின்றன. நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...