கணினி நாசகாரர்கள் சதி திட்டத்தில் வினாடிக்கு 43 ஆவணங்கள் திருட்டு!!!

கணினி நாசகாரர்கள் சதி திட்டத்தில் வினாடிக்கு 43 ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஆய்வறிக்கை:

2016ல், பல்வேறு நிறுவனங்களின் கணினியில் புகுந்து, நாசகாரர்கள்
திருடிய ஆவணங்கள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்த ஆய்வறிக்கையை விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திருட்டு:

உலகளவில், 11 நாடுகளில் உள்ள, வங்கி, தயாரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 139 நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 2016ல், 138 கோடி ஆவணங்கள், கணினி நாசகாரர்களால் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, வினாடிக்கு, 43 ஆவணங்கள் களவு போயுள்ளன. இது, 2015ல் திருடப்பட்ட ஆவணங்களை விட, 53.6 சதவீதம் அதிகம்.

நம்பிக்கை இழப்பு:

கணினி நாசகாரர்கள், நிறுவனங்களின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிடுவதன் காரணமாக, அந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்து விடுகின்றன. அவற்றின் வர்த்தகம், பங்கு விலை ஆகியவையும் பாதிப்பிற்கு ஆளாகின்றன. ஆரோக்கிய பராமரிப்பு துறையில் தான், அதிக அளவில் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக, விப்ரோ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...