7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல்: ஜெட்லி!!!

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல் உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:


* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும்.

* உ.பி.,யில் சாக்ரி-அலகாபாத் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

* மிக உயர்ந்த பனி பிரதேசமான காஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஜெட்லி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...