ஐ.நா., விருது பெற்றார் மம்தா சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கவுரவம்!!!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத் திற்காக, 'கன்யா ஸ்ரீ' திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்திய, மேற்கு வங்க அரசின் சாதனையை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பொது சேவை விருது வழங்கப்பட்டது. இதை, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றுக் கொண்டார்.


'கன்யா ஸ்ரீ' திட்டம்

பெண் குழந்தைகளின் கல்வி, அவர்களின் முன்னேற்றம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சுத்தம், சுகாதாரம், மூத்த குடி மக்களுக்கான உதவி உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக செயல்படும் நாடுகளுக்கு, ஆண்டு தோறும், ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பொது சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில், 'கன்யா ஸ்ரீ' என்ற திட்டத்தின் மூலம், பெண் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையை
குறைத்து, பெண் கல்வி, முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதை அடுத்து, இந்த ஆண்டுக்கான, பொது சேவை விருதுகள் பெறும் நாடுகள் பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்தது.

இதையடுத்து, நெதர்லாந்து நாட்டில் நடந்த நிகழ்ச்சி யில், ஐ.நா., சார்பில்வழங்கப்பட்ட பொது சேவை விருதை, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி பெற்றுக் கொண்டார். பொது சேவையில் சிறப்பாக செயல்பட்ட, அர்ஜென் டினா, அர்மெனியா, ஆஸ்தி ரேலியா, கொலம்பியா, ஈக்குவடார், மங்கோலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும், இந்தியாவுடன் முதல் பரிசை பகிர்ந்து கொண்டன.

ஐ.நா., பொது சேவை விருது பெற்ற பின், திரிண முல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வரு மான, மம்தா பானர்ஜி பேசியதாவது:

இந்தியா சார்பில் இந்த உயரிய விருது பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேற்கு வங்கத்தில், பெண் குழந்தைகளுக்கு, மிகச் சிறிய வயதில் வலுக்கட்டாயமாக, திருமணம் செய்யப்பட்டதை கண்டு நான் மிகவும் மனம் வருந்தினேன்.இதனால், பெண் கல்வியின் நிலை மிக மோசமாக இருந்தது. இதுபோன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக் கவே, மாநில அரசின் சார்பில் கன்யா ஸ்ரீ திட்டம் துவக்கப்பட்டது.

இதன்படி, திருமணம் செய்யாமல், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு, அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.இதனால் குழந்தை திருமணம்
எண்ணிக்கை கணிசமாக குறைந்து, பெண் கல்வி மேம்பட்டுள்ளது.

மக்களுக்கு பெருமை

சேவை என்பது அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மக்க ளால்,மக்களுக்காக செயல்படுவதே அரசாங்கம் என்பதை உணர்ந்து நாங்கள்செயல்படுகிறோம்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின், மாநில அரசு அதிகாரிகளுடன், 300க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். தொடர் கண்காணிப்பு, திட்டத்தை வெற்றிகர மாக செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளாலேயே இந்த விருது கிடைத் துள்ளது. இதன் மூலம் நாட்டு மக்கள் பெருமை அடைவர்.இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...