கருணை மனுக்களை நிராகரித்த பிரணாப்!!!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இரண்டு கொலை வழக்குகளின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதன் மூலம், அவர் நிராகரித்த கருணை மனுக்களின் எண்ணிக்கை, 30 ஆக உயர்ந்துள்ளது.

தனிப்பட்ட உரிமை

கொடூர வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தங்களை விடுவிக்க கோரி, ஜனாதிபதிக்கு
கருணை மனு அனுப்புவர். இதில் முடிவு எடுப்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட உரிமை. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு கருணை மனுவை நிராகரித்தும், ஒரு மனுவை ஏற்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மனுக்களை நிலுவையில் வைத்தார். ஒரு இளம் பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்சய் சட்டர்ஜி என்பவரின் கருணை மனுவை கலாம் நிராகரித்தார்.


இதன் பிறகு ஜனாதிபதியாக வந்த பிரதீபா பாட்டீல், 34 கருணை மனுக்களை ஏற்று உத்தரவு பிறப்பித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

கசாப், அப்சல் குரு

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகு, மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அஜ்மல் கசாப், 2001ம் ஆண்டில் பார்லிமென்ட தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றஅப்சல் குரு, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் சிமோன்,ஞானபிரகாஷ், மாதையா, பில்வேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

பீஹாரில், 1992ம் ஆண்டு, மாவோயிஸ்ட் தாக்குதலில், 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கிருஷ்ணா மோஷி, நான்ஹிலால் மோஷி பிர்குர் பஸ்வான் மற்றும் தர்மேந்திர சிங் என்ற தாரூ சிங் ஆகியோரின் கருணை மனுக்களை கடந்த ஜனவரி மாதம், ஜனாதிபதி பிரணாப் ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கான தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

2 கொலை வழக்கு

கடந்த, 2007 ம் ஆண்டு புனே நகரில் ஒரு இளம் பெண் கற்பழித்து கொல்லபட்டார். இதில் புருசோத்தம் தாசராத் போர்டே, பிரதீப் யஷ்வந்த் கோகடே ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2012ம் ஆண்டில், இந்தூரில்,நான்கு வயது பெண் குழந்தை கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், பாபு என்ற கேதான், ஜிதேந்திரா என்ற ஜிட்டு, தேவேந்திரா என் சன்னி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் கருணை மனுக்களை மே மாதம் கடைசி வாரத்தில், ஜனாதிபதி பிரணாப் நிராகரித்துள்ளார். இத்துடன், அவரால் நிராகரிக்கப்பட்ட கருணை மனுக்களின் எண்ணிக்கை, 30 ஆக உயர்ந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...