அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்களின் புள்ளி விபரங்கள் அடங்கிய பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
மேற்கு மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்டவையும், தெற்கு மாநிலங்களில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவையும்
முன்னிலையில் உள்ளன. மேலும் இந்த மாநிலங்களின் கடன் அளவு கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரூ.1,04,300 கோடியாக இருந்த இந்த மாநிலங்களின் கடன், 1990 - 2015 காலகட்டத்தில் ரூ.68,78,500 கோடி அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.
மேற்கு மாநிலங்கள் ரூ.23,39,900 கோடியும், தெற்கு மாநிலங்கள் ரூ.18,30,700 கோடியும் கடன் வைத்துள்ளன. மேலும் வடக்கு மண்டலம் ரூ.15,86,800 கோடி, மத்திய மண்டலம் ரூ.5,50,200 கோடி, கிழக்கு மண்டலம் ரூ.5,17,300 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலம் ரூ.53,600 கோடி கடனுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.