ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுவன்!!!


லண்டனில் நடந்த ஐ.கியூ தேர்வில் 11 வயது இந்திய சிறுவன் 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட
அதிகமாகும்.
இங்கிலாந்தின் ரீடிங் நகரில் வசிக்கும் அர்னவ் ஷர்மா(11) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐகியூ அளவை சோதிக்கும் மென்சா தேர்வை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் கலந்து கொண்டார். பதற்றம் இல்லாமல் கலந்து கொண்டு கடினமான கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஆச்சர்யம்:

அர்னவ் ஷர்மா கூறுகையில், இந்த தேர்வு கடினமாக இருக்கும். இதனால் அதிகம் பேர் கலந்து கொள்ள மாட்டார்கள். இதனால் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. இரண்டரை மணி நேரம் நடந்தது. 7 அல்லது 8 பேர் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். 2 பேர் மட்டுமே சிறுவர்கள். மற்றவர்கள் பெரியவர்கள். இந்த தேர்வுக்காக நான் எதையும் படிக்கவில்லை. அதேநேரத்தில் பதற்றமாகவும் இருக்கவில்லை. தேர்வு முடிவை சொன்ன போது, எனது குடும்பத்தினர் முதலில் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
விஞ்ஞானிகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்களை விட அர்னவ் கூடுதலாக 2 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
ஐகியூ தேர்வை நடத்தும் மென்சா உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான அமைப்பாகும். இந்த தேர்வு இங்கிலாந்தில் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மனிதர்களின் நுண்ணறிவை சோதிக்கும் இந்த தேர்வில் குறைவான நபரே பங்கேற்பார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...