வாட்ஸ் ஆப் மூலம் சம்மன் அனுப்பும் போலீசார்!!!

பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்ட போலீசாருக்கு, நீதிமன்ற சம்மன் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2,500 போலீசார்.இது குறித்து பதின்டா மாவட்ட சீனியர் எஸ்.பி., நவீன் சிங்களா கூறியதாவது:



பதின்டா மாவட்டத்தில், 2,500 போலீசார் உள்ளனர். இவர்கள் அவ்வவ்போது நீதிமன்ற வழக்குகளில் சாட்சியாக ஆஜராக வேண்டியுள்ளது. இதற்காக நீதிமன்றம் அனுப்பும் சம்மனை, சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் ஒரு ஊழியர் மூலம் கொண்டு போய் சேர்ப்பது என்பது மிகப்பெரிய வேலையாக இருந்து வந்தது.

இதனால் கால விரயமும் ஏற்பட்டது. எனவே, நீதிமன்ற அனுமதியுடன், போலீசாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் நீதிமன்ற சம்மனை அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளோம்.

ஜூன், 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை பரிசோதனை முயற்சியாக, 61 போலீசாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், 41 பேர் சரியான தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இப்பணியை மேற்கொள்ள தனியாக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கம்ப்யூட்டர், கலர் பிரிட்டனர், 2,500 போலீசாரின் வாட்ஸ் ஆப் வசதி உள்ள மொபைல் போன்களின் எண்கள் தரப்பட்டுள்ளன.



'டிக்' குறியீடு

வாட்ஸ் ஆப் மூலம் சம்மன் தகவலை அனுப்பும் போது, 'டிக்' குறியீடு தோன்றும். அந்த தகவல் டெலிவரியான உடன் மற்றொரு, 'டிக்' குறியீடு தோன்றும். சம்பந்தபட்ட நபர் அந்த தகவலை பார்த்து விட்டால், இரண்டு, 'டிக்' குறியீடுகளும் நீல நிறத்தில் மாறும். அதை, 'ஸ்கிரீன் சாட்' ஆக மாற்றி, கலர் பிரின்டர் மூலம், பிரின்ட் எடுத்து நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...