கரூர் மாணவர் உருவாக்கிய உலகின் மிகச்சிறிய செயற்கைக் கோளை நாசா அமைப்பு, விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, ஆண்டு தோறும் ‛‛க்யூப் இன் ஸ்பேஸ்'' என்ற போட்டி நடத்தகிறது. இந்த வருடம் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" என்ற அமைப்பின் உதவியுடன், தமிழகத்தின் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயதே ஆன ரிபாத் ஷரூக் என்ற மாணவர் மிகச்சிறிய சாட்டிலைட் தயாரித்தார். இதற்கு
அப்துல்கலாம் நினைவாக ‛‛கலாம் சாட்'' எனபெயரிடப்பட்டது.
இதன் எடை 64 கிராம் மட்டுமே இந்த சிறிய சாட்டிலைட்டை முதன் முதலில் 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைத்தார். இந்த செயற்கை கோளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனை மாணவனின் குடும்பத்தினர், சக மாணவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
‛‛கலாம் சாட்'' சிறப்பு அம்சங்கள்
'கலாம்சாட்' என்ற க்யூப் வடிவ செயற்கைக்கோள், கார்பன் இழைகளால் 3-டி பிரின்டிங் தொழில்நுட்பம் கொண்டது. இந்த செயற்கைகோள் வெறும் 3.8 செ.மீ. நீளமும், 64 கிராம் எடையும் கொண்டது. இதற்கு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், "உலகின் மிகவும் எடைக்குறைவான மற்றும் சிறிய செயற்கைக்கோள்" என்று சான்றளித்து பாராட்டியுள்ளது.