உயர்நீதிமன்ற தடையை மீறி, அங்கீகாரமில் லாத மனைகள் விற்பனையை பத்திரப்பதிவு செய்ததால், ௨௬௦ அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி, அவர்க ளில், 54 பேருக்கு பதவி உயர்வு வழங்க, பதிவுத் துறை முடிவு செய்துஉள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தடை விதித்தது
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இந்த தடையை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பதிவு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
ஆரம்பத்தில் மறுத்த பதிவுத்துறை, பின், 9,760 பத்திரங்கள் மட்டுமே பதிவானதாக,
நீதிமன்றத் தில் தெரிவித்தது.ஆனாலும், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பட்டியலுடன், உண்மை விபரங் களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தடையை மீறி நடந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர் பொறுப்பைகவனிக்கும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைகேடு
இதன்பின், நடத்தப்பட்ட விசாரணையில், 95 ஆயிரம் பத்திரங்கள், தடையை மீறி பதிவு செய்யப் பட்டதும், சார் பதிவாளர்கள் மற்றும் அந்த பொறுப்பை கவனிக்கும் ௨௬௦ பேர், அந்த முறை கேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
ஆனாலும், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர் பான வழக்கு, ஜூன், 15ல் விசாரணைக்கு வந்த போது, இந்த விபரங்களை பதிவுத்துறை தாக்கல் செய்ய வில்லை. அதனால், இது தொடர்பாக நீதிமன்றம் புதிதாக, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்தச் சூழலை சாதகமாக பயன்படுத்திய பதிவுத் துறை,நீதிமன்றத்தால், 'சஸ்பெண்ட்' செய்ய பரிந் துரைக்கப்பட்ட, 260 பேரில், 40 பேருக்கு, சார் பதிவா ளர்களாகவும், 14 பேருக்கு மாவட்ட பதிவாளர்களாக வும், பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரித்து
உள்ளது. இது, பதிவுத்துறையில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
'அரசு தலையிட வேண்டும்
'''உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சுய லாபத்திற் காக, அங்கீ கார மில்லாத மனைகளை பதிவு செய்த அதிகாரி கள், துறையை ஆட்டிப்படைக் கும் அளவுக்கு, செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். தங்களுக்கு ஒத்து வராத, ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளையே மாற்றும் அளவுக்கு, மேலிட ஆதரவு பெற்று விடுகின்ற னர். அவர்களை எதிர்க்க முடியாததால், நீதிமன்ற உத்தரவை பற்றி கவலைப்படாமல், பதவி உயர்வு வழங்க, பதிவுத்துறை நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இந்த விஷயத்தில், அரசு அமைதியாக இருப்பதால், நீதிமன்றம் நேரடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதிவுத்துறை அதிகாரிகள்.