நிலம் கையகப்படுத்துதல் சட்ட வரைவு விதிகள் வெளியீடு!!!


அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுவோருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 'வெளிப்படை யானநிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்வு சட்டம் - 2013'ஐ, மத்திய அரசு நிறைவேற்றியது.
இதை செயல்படுத்து
வதற்கான வழிகாட்டி விதிகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை 
தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. தமிழகத்தில், இந்த விதிகள் அமலுக்கு 
வராததால், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு, நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் நிலம் கையகப் படுத் துதல்சட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு, வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. 'தமிழ் நாடு நியாயமான இழப்பீட்டுக்கான உரிமையை உறுதி செய்தல், வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்வு விதிகள் - 2017' என்ற பெயரில், இந்த விதிகள் வெளியிடப் பட்டுள்ளன.
இதற்கான அரசிதழ் அறிவிப்பு, ஜூன்,9ல் வெளியானது. பொதுமக்கள், ஜூலை, 9க்குள் கருத்து தெரிவிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

* புதிய திட்டங்களுக்கு நிலம் தேவை எனில், விரி வான திட்ட அறிக்கையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அரசுத் துறை, கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

* அதன் பின், நிலத்தை தேர்வு செய்தல்; கையகப்படுத்துதல்; மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்தல் மற்றும் மறு குடிய மர்வு திட்டங்கள் தயாரித்தல் போன்றவற்றை, கலெக்டரால் நியமிக்கப்படும் குழு மேற் கொள்ளும். 
* நிலம் கையகப்படுத்த குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...