செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் :ஆதாரம் கிடைத்ததாக நாசா தகவல் !!

நாசா:செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆப்பர்ச்சுனிட்டி என்ற ரோவர், 2004 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது. தற்போது செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று
இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 22 கிலோ மீட்டர் துாரம் பள்ளம் செவ்வாயில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இந்தப் பள்ளம் மிகப்பெரிய ஏரியாக இருக்கலாம் என்றும், இதில் காணப்படும் பாறைகள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...