இதயத்தில் இன்பம்பொங்க இன்சுற்றம் இனிதேசூழும் இந்நாளில் வாழ்த்திசைத்து *S S T A* மகிழ்கிறது !!

"ஊனைச் சுருக்கி
  உள்ளத்தை உயிர்ப்பித்து
உடம்பிற்கு ஜக்காத்தாய்
  உயரிய நோன்பிருந்து

கருணையே வடிவான
  ககனத்து இறையோனை
கணநேரம் மறவாது
  கடமைகளில் கண்வைத்து

ஏழைக்கு உணவளித்து
  இல்லார்க்கு ஈகைசெய்து
ஏகனிறை மார்க்கத்தின்
  இனியநாள் ரமலானை


இதயத்தில் இன்பம்பொங்க
  இன்சுற்றம் இனிதேசூழும்
இந்நாளில் வாழ்த்திசைத்து
  *S S T A*  மகிழ்கிறது.

வியர்வையது காயுமுன்னே
  விரைந்தூதியம் பெற்றிடத்தான்
  விதிசொன்ன வழிநடப்போம்
  வேளையது கூடிவரும்

அரசாங்க நீதியது
  அநீதியாய் ஆனதன்றோ
அநீதிக்கு ஆளானோர்
  அன்பான பிரார்த்தனையை

எங்கும்நிறை ரஹுமானும்
  ஏற்றருள்வான் என்பதுண்மை
எல்லாம் வல்லோனின்
  இரக்கத்தால் இனிநடக்கும்."

 *இனிய ரமலான் வாழ்த்துக்கள்*

.... கணபதி சோதரன்,  சத்தியமங்கலம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...