பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி


சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, மதுரவாயலில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் சகமாணவர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம், அந்த மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

மாணவி தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி, பள்ளியின் 2-வது மாடியில் இருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்துவிட்டார். இதில் அவருக்கு முதுகு தண்டு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.

பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...