சென்னை உயர்நீதிமன்றத்தில் 127 காலியிடங்கள்: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 127 Sanitary
Worker, Sweeper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 127

பணியிடம்: சென்னை:

பணி- காலியிடங்கள் விவரம்:

பணி: Sweeper - 68

பணி: Sanitary Worker - 59

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Registrar General, High Court of Madras என்ற பெயருக்கு டி.டி,யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General, High Court, Madras 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/Recruitmhc2017.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...