கனடா நாட்டின் சுங்கச் சாவடிகளில் எடை அளக்கும் எலக்ட்ரானிக் எந்திரங்களில்
சரியான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு செலுத்தாமல் விட்டதால் இந்திய சாலைப் போக்குவரத்துத் துறைக்கு தேவையில்லாமல் ரூ.1.85 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய பொது கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய சாலைப் போக்குவரத்துத் துறையானது கனடா நாட்டின் சுங்கச் சாவடிகளில் எடையை அளக்கும் எந்திரங்களை அமைக்கும் திட்டங்களில் கடந்த 2008ஆம் ஆண்டில் முதலீடு செய்தது. இதில் எட்டு வருடங்களில் இரண்டே இரண்டு எந்திரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள எந்திரங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த அனைத்து எந்திரங்களும் கனடாவின் சர்வதேச சாலை டைனமிக்ஸ் இன்க் நிறுவனத்திடமிருந்து ரூ.1.89 கோடி தொகைக்கு கடந்த 2007ஆம் ஆண்டில் இந்தியா வாங்கியது.
இந்த எந்திரங்களைக் கொண்டு சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களின் பிரிவு மற்றும் எடை அடிப்படையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்தியாவின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இதில் முறையாக இல்லாததால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 2016 நிலவரப்படி, இன்னும் 6 எந்திரங்கள் நிறுவப்படாமல் உள்ளது என்று மத்திய பொது கணக்காய்வாளர் அறிக்கை தெரிவித்துள்ளது.
