வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19,000 கோடி கறுப்பு பணம்!!!


''வருமான வரித்துறை சோதனையில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள்
19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது,'' என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி., வங்கி உட்பட வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மொத்தம், 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

31வழக்குகள்

இதுதொடர்பாக 72 புகார்கள் பெறப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அமலாக்க துறை உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளும் உதவுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...