ரூ.20,000 கோடி செலவில் ஆறு புதிய ஐ.ஐ.டி-கள் !!

20,000 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் கூடுதலாக ஆறு ஐ.ஐ.டி-கள் (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) தொடங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 7,000 கோடி ரூபாய் செலவிடப்படும். அதற்கு அடுத்தகட்டமாக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மீதி செலவுகள்
மேற்கொள்ளப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், கோவா, ஜம்மு - காஷ்மீர் போன்ற இடங்களில் தற்காலிக கட்டடங்களில் ஐ.ஐ.டி. இயங்கி வருகின்றன. குறைந்த ஆசிரியர்கள், பணியாட்கள் மற்றும் குறைவான மாணவர்களால் இந்த ஐ.ஐ.டி-கள் இயங்கக் குறைவான செலவே ஆகிறது. “மற்ற கல்வி நிறுவனங்களைப் போல இல்லாமல், ஐ.ஐ.டி-கள் இயங்கப் பெருமளவில் செலவு ஏற்படும்” என்று அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிதாக எட்டு ஐ.ஐ.டி-கள் கட்ட 6,000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்திருந்தது. ஆனால், நிலம் பெறுதல், கட்டுமானப் பணிகள், பணவீக்கம் போன்றவற்றால் மதிப்பீடு 14,000 கோடி ரூபாய் ஆனது. 2014ஆம் ஆண்டில் இந்த நிதிக்கான ஒப்புதலை பாஜக அரசு அளித்தது. தற்போது காந்திநகர், புவனேஷ்வர், ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், ரோபார், மண்டி, பாட்னா ஆகிய இடங்களில் தற்காலிக கட்டடங்களில் புதிய ஐ.ஐ.டி-கள் இயங்கி வருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...