22.6.1988-அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போரட்டம் -இயக்க வரலாற்று பார்வை !!

*அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இணைந்து  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட கேட்டு போராட்டம் நடைபெற்ற தருணம்  தமிழகத்தில் ஆளுநர் அதிகாரத்தில் இருந்த நேரம்*

*மத்திய அரசுக்கு இணையான  ஊதியம் கேட்டு நடைபெற்ற வேலை நிறுத்ததில் கலந்து  ஊழியர்கள் மெத்தனமாக இருக்காமல் தன்அலுவலகத்தில்
முன்புநடைபெறும் கூட்டமோ , ஆர்பாட்டத்திலலோ தினமும்  கலந்து கொண்டு  தன் இல்லத்திற்கு மதியத்திற்கு மேல் செல்வர்கள்*

*இப்போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு ஒரு அறிவிக்கப்படாத யுத்தமே தொடுத்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு குற்றகுறிப்பாணை வழங்கியது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள். 2500 மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டார்கள்*

*இருந்தாலும் போரட்டங்களில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும், அதனுடைய தளராத வீச்சும், வேலைநிறுத்த போராட்டம் தேவையில்லை என்றவர்களையும் , ஆளுநர் ஆட்சியில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது என்றவர்களையும் நிர்பந்தித்து வேலை நிறுத்ததில் இறங்க வைத்தது. இந்நிலைக்கு காரணம்  போர்களம் கண்ட தோழர்களே ஒற்றுமை..*

*வேலை நிறுத்தம் ஒரு மாதத்தை  நெருங்கியது. அரசு நிர்வாகம் முழுவதுமே  சீர்குலைந்து ஸ்தம்பிக்கும் நிலைக்கு போனது.*

*போரட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்து இருந்த நிலையில்  ஜீலை 22  சென்னை  முற்றுகைப் போரட்டம் நடத்துவதென முடிவு .மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள ஆசிரியர்கள் சென்னை நோக்கி புறப்பட்டார்கள். சென்னை நுழைய பல்வேறு இடையூறுகள் அதை தாண்டி முற்றுகை போராட்ட தளத்தில் நம் தோழர்கள் நுழைந்தனர்கள்*

*ஏராளமான பெண்கள் தெருவில் தைரியமாக அமர்ந்து கொண்டு மறியல் செய்ததும், குண்டான் தடிகளுக்கோ, துப்பாக்கிகளுக்கோ, குதிரைபடைகளுக்கோ அஞ்சாமல் தைரியமாக இருந்ததும், அரசு ஊழியர்-ஆசிரியர்கள் இயக்க வரலாற்றில் அதற்கு முன்னரும் ஒரு போதும் நடைபெறாத வீர செயலாகும்*

*ஆளுநர் ஆட்சியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச்சு வார்த்தை முடிந்தது.  26.7.1988ல் வேலைக்கு திரும்பும் போது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது, தற்காலிகபணிநீக்கம் செய்தவர்கள், வேலைநீக்கம் செய்தவர்கள் , பெருமளவில் மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் 22.6.1988ந் தேதி பணியாற்றிய அதே இடத்தில் நியமனம்  செய்யபடுவர்கள் எனவும், வேலை நிறுத்த நாட்கள் தகுதியான விடுப்பாக கருதி ஆணையிடப்படும் என முடிவானது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றோம்.*

 *ஊழியர்கள் ஒற்றுமையை கட்டிய போரட்டம்*

*இதுபோன்ற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போரட்டம்  1988 போன்று வெற்றி பெற வேண்டும் எனில்....*

*பழைய பென்சன் பெற வேண்டும் எனில் ....*

*8 வது ஊதியகுழு அமைத்து சங்க தலைவர்களை அழைத்து  முரண்பாடுகள் அற்ற ஊதியம்  பெற வேண்டும் எனில்....*

*1.1.2016ம் தேதி முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்  பெற வேண்டும் எனில் ....*

*வருகிற 5.8.2017 சென்னை ஜேக்டோ-ஜீயோ பேரணி வெல்ல வேண்டும். அதில் அத்துணை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முழு அளவில் பங்கு பெற வேண்டும் தோழர்களே.....*

*நமது இப்போர் 1988  போல இயக்க வரலாற்றில் இடம் பெற வேண்டும்*

*ஒன்றுபடுவோம்*
*முன்னோறுவோம்*
*வெற்றிபெறுவோம்*

(நன்றி-அரசு ஊழியர் வரலாற்றில் தோழர் எம்.ஆர்.அப்பன் என்ற இதழில் இருந்து பதியப்பட்ட சில வரிகள்)

*போராட்ட களம் காண வரவேற்கும்  தோழன்.......*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...